இன்று 100 மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் 100 மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

இதன்படி, காலி, மாத்தறை, களுத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு 100 மில்லமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, கம்பஹா, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆய மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின்சில இடங்களில், மாலை அல்லது இரவு வேளைகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அண்மைய நாட்களாக நிலவி சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *