2021 ஆம் ஆண்டு 22 கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம்!

உலகளவில் இந்த ஆண்டு குறைந்தது 22 கோடி மக்கள் வேலையில்லாமல் இருப்பார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா காரணமாக உலகளவில் 22 கோடி மக்கள் இந்த ஆண்டு வேலையில்லாமல் இருக்கும் நிலை ஏற்படும் என்று சர்வேதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த அமைப்பு கணிப்பின் படி அடுத்த ஆண்டு 25 கோடி பேர் வேலையில்லாமல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தும் முன்பு 2019 இல் பதிவு செய்யப்பட்ட 187 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்தனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கிடையில் இது இந்த ஆண்டு உலகளாவிய வேலையின்மை விகிதமான 6.3 சதவீதமாக உள்ளது என்றும், இது அடுத்த ஆண்டு 5.7 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய விகிதமான 5.4 சதவீதமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறைந்தது 2023 வரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேலைவாய்ப்பு வளர்ச்சி போதுமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் முறைசாரா துறைகளில் பணிபுரியும் 200 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *