ஆசியாவிலேயே மிக உயரமான யானை சிலை!

ஆசியாவிலேயே மிக உயரமான யானை சிலை
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் அருகே  சலுப்பை கிராமத்தில் அமைந்துள்ளது..
சுண்ணாம்பு (சுதை) மற்றும் செங்கல் கொண்டு கி.பி 16-17 ஆம் நூற்றாண்டில்
நாயக்கர் கால கலைபாணியுடன் இந்த யானை சிற்பம் சுமார் 8.50 மீட்டர் உயரம் கொண்டுள்ளது…

கங்கைகொண்டசோழபுரம்(சோழர்களின் தலைநகரம்) அதன் அருகில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.சாளுக்கியப் படைகளை சோழப்படைகள் துவம்சம் செய்த இடம் என்பதால் இதற்கு “சாளுக்கிய குல நாசனி “ என்பது பழைய பெயர். அதுவே மருகி சலுப்பை என்றாகிவிட்டது.

இந்த யானைக்கும் ஒரு கதை உண்டு, திருடன் ஒருவன் மரத்திலிருந்து பலா காய் ஒன்றை பறித்துவிட்டு ஓட, காவல் நாய் அவனை விரட்டுகின்றது.அதற்குள் அழகர்சாமி, யானை உருவில் வந்து அந்த திருடனை துதிக்கையால் பிடிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோவில் குறித்த வரலாற்றுச் செய்திகள் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கல்வெட்டுகளில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *