நாளை 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு ஆரம்பம்!

5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் நாளை (02) முதல் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட இருக்கும் 5000 ரூபாய் உதவித் தொகையினைப் பெற தகுதியுடையோர்கள் விபரம் வருமாறு:

1.நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்கள்.

  1. சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.
  2. சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்.
  3. 70 வயதினைக் கடந்த மூத்தவர்கள்.
  4. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவிற்கான முத்திரையினைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.
  5. மாற்றுத் திறனாளிகள்.
  6. இதுவரை கொடுப்பனவினைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.
  7. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும்.
  8. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்கள்.
  9. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர்அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனவினைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் – அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட பெறுவனவினைகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவார்.
  10. இந்த உதவி தொகையினை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்கள் ஊடாக மக்கள் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *