கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய பைபிள் புத்தகம்!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனோஜ் சாமுவேல் குடும்பத்தினர் துபாயில் வசித்து வருகின்றனர். மனோஜ் சாமுவேலுக்கு மனைவி சூசன், மகன் கருண், மகள் கிருபா சாரா ஆகியோர் உள்ளனர். இவர்கள், உலகின் மிகப்பெரிய பைபிள் புத்தகத்தை தயார் செய்துள்ளனர். இதற்காக 5 மாதங்கள் தினமும் 15 மணி நேரம் பைபிள் புத்தக்கத்தை உருவாக்க செலவிட்டுள்ளனர். கையால் எழுதப்பட்ட இந்த புத்தகம், 1,500 பக்கங்களுக்கும், 8 லட்சம் வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்திட்ட 60 பேனாக்களை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

சாதாரண ஏ-4 அளவுள்ள காகிதத்தை விட 8 மடங்கு பெரிதான ஏ-1 அளவுள்ள காகிதங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகத்திற்கு, கின்னஸ் நிறுவனம் அங்கீகராம் செய்து சான்றிதழ் தர உள்ளது. முன்னதாக துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள மார் தோமா தேவாலயத்தின் 50வது ஆண்டு நிறைவு கடந்த 2019ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது, இந்த புத்தக பிரதியை அந்த தேவாலயத்தின் போதகர் ரெவரன்ட் ஜினு ஏப்பனிடம் குடும்பத்தினர் வழங்கினர். தோலினால் கட்டப்பட்ட இந்த புத்தகத்தை அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரத்யேக பேழையில் வைத்து அந்த தேவாலயத்திற்கு மனோஜ் சாமுவேல் குடும்பத்தினர் வழங்கினர்.

தற்போது ஏ-2 பேப்பர் அளவில் பைபிள் புத்தகத்தை மலையாள மொழியில் எழுதி வருவதாக மனோஜ் சாமுவேலின் மனைவி சூசன் சாமுவேல் தெரிவித்தார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *