ஜூன் 7 ஆம் திகதி வரை பயணத் தடை நீடிப்பு?

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் 7ஆம் திகதி வரை தளர்த்தப்படாது, முழுமையான முடுக்கமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 25ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும், இந்த நிலை தொடருமாயின், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்தாது தொடர வேண்டும் என கொவிட் தடுப்பு செயலணி வலியுறுத்தியுள்ளது.

இதன்படி வரும் 31ஆம், 4ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனத் தெரியவருகிறது.

இதனால் வீடுகளுக்கு நடமாடும் பொருட்களை வாகனங்களின் ஊடாக விநியோகிப்பதற்கான வேலைத் திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *