தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்தும்!

தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்தும் என பிலிப்பைன்ஸ் பேராசிரியர் ஒருவர் கண்டறிந் துள்ளார்.

லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த இளம் தேங்காய் எண்ணெய்(virgin coconut oil) உதவும் என்று பிலிப்பைன்ஸின் அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியர் ஃபேபியன் டேரிட் கூறியுள்ளார்.

தூய தேங்காய் எண்ணெயிலுள்ள சேர்மங்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் உடலில் வைரஸின் அளவை 60 – 90 சதவீதம் வரை குறைக்க முடியும் என பிலிப்பைன்ஸ் ஒருங்கிணைந்த இரசாயனவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் டெரிட் கூறியுள்ளார்.

எனினும் வைரஸின் லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே இதைச் செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிஎன்என் உடன் பேசிய பேராசிரியர் டெரிட், லகுனாவி லுள்ள கொரோனா சிகிச்சை நிலையம் மற்றும் பொது வைத்தியசாலையில் 57 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தூய தேங்காய் எண்ணெய் கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகளைக் குறைக்கும் என்பதை உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கிய பேராசிரியர், லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு மூன்று முறை 2 தேக்கரண்டி தூய தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இது தற்போது சோதனைகளால் பரிந்துரைக்கப்பட்ட அளவு என்றாலும், இந்த அளவு குறித்து மேலும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது என்றும் பேராசிரியர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *