பாடசாலை நாட்களில் பணம் கட்ட அவதிப்பட்ட இசைப்புயல் ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது பள்ளி நாட்களில் பீஸ் கட்ட முடியாமல் அவதிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அவரின் பள்ளி குறித்து நிறைய கேள்விகள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. இனி சாதிக்க ஒன்றுமே இல்லை என்னும் அளவிற்கு எல்லா சாதனைகளையும் படைத்தவர்.
எத்தனை எத்தனை சாதனைகளை படைத்தாலும்.. எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் எல்லா புகழும் இறைவனுக்கே என்று புகழ் மாலைகளை துச்சமாக கடந்து செல்வதுதான் ரகுமான் பண்பு.

10 வயதிலேயே அப்பா சேகரை இழந்துவிட்டு, பொருளாதார ரீதியாக பல துன்பங்களை அனுபவித்தவர்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.

அதுவும் இவர் படித்த பள்ளியில் பல விதமாக கொடுமைகளுக்கு ஆள் ஆகி இருக்கிறார். இவரின் பள்ளி நிர்வாகம் இவரை பலமுறை அவமானப்படுத்தியதாக இணையத்தில் நிறைய தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அதிலும் பொருளாதார ரீதியாக ரகுமானை அவர் படித்து பள்ளி மோசமாக நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அப்படி என்ன நடந்தது?.. சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில்தான் ரகுமான் படித்துக்கொண்டு இருந்தார்.

அப்பாவின் மறைவை தொடர்ந்து இவரால் பள்ளி தேர்வுக்கு சரியாக பீஸ் கட்ட முடியவில்லை. தங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை ரகுமான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்லி இருக்கிறார்.

பீஸ் கட்ட முடியலை..சீக்கிரம் கட்டிடறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர்களோ பீஸ் கட்டினால் தான் நீ தேர்வு எழுத முடியும் என்று கூறியுள்ளனர்.

பின் ரகுமான் தனது அம்மாவை அழைத்து சென்று பேசியும் பள்ளி நிர்வாகம் கடுமையாக பதில் அளித்துள்ளது. அப்பா இல்லை என்று கூறியும் பள்ளி நிர்வாகம் மனம் இறங்கவில்லை.

அந்த பிரபல பள்ளி, ரகுமானின் அம்மாவிடம்.. பீஸ் கட்ட முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் பிளாட்பார்மில் போய், யாரிடம் இருந்தாவது காசு கிடைக்குமா என்று கேட்டு பாருங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆம்.. அந்த பள்ளி நிர்வாகம் இப்படித்தான் பதில் சொல்லி இருக்கிறது. தனது பள்ளி நாட்களில் நடந்த இந்த கொடுமையான சம்பவத்தை ஏ.ஆர் ரகுமானே பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பள்ளி பீஸ் காட்டாத காரணத்தால் எப்படி எல்லாம் நடத்தியது என்று அந்த பேட்டியில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *