இலங்கைக்கு எதிரான 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 103ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடர் பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்று வருகிறது இத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று தொடரை தம் வசப்படுத்தியுள்ளது,

மேலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முதல் முறையாக பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *