ஹஜ் கடமையை நிறைவேற்ற 60 ஆயிரம் பேருக்கு அனுமதி!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அறிய முடிகிறது மேலும் இலங்கையில் இருந்து ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை செலவாகக்கூடும் என அறியமுடிகிறது.இலங்கையர்கள் எத்தனை பேர் இலங்கையில் இருந்து ஹஜ் யாத்திரையை மேற்கொள்வார்கள் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அறிய முடிகிறது.

உலகம் முழுவதும் கொரோனா 2ஆம் அலை மற்றும் 3வது அலை பரவல் தீவிரம் அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில், வரும் ஜூலை மாதம் 60,000 ஹஜ் பயணிகளை அனுமதிக்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.  உள்நாட்டை சேர்ந்த 15,000 பேரையும் பிறநாடுகளை சேர்ந்த 45,000 பயணிகளையும் அனுமதிக்க சவூதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் இருந்து 5,000 பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என மத்திய ஹஜ்  கமிட்டி தெரிவித்துளளது. இந்தியாவில் உள்ள 1,000 இஸ்லாமியர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். 2019ஆம் ஆண்டு 1.75 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 18 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளோரை அனுமதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

2021 ஹஜ் யாத்திரை மேற்கொள்ள யாருக்கெல்லாம் தகுதி:

* உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் உள்ளடக்கிய 60,000 பேர் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை பயணிக்க திட்டம்

* ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 18-60 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

* ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் நபர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

* ஹஜ் பயணத்துக்கு முன்னர் கடந்த ஆறு மாதங்களுக்குள் எந்தவொரு நோய்க்கும் மருத்துவமனையில் இருந்திருக்கக்கூடாது. (ஆதாரம் தேவை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *