முடக்கத்துக்குள் வீடுகளில் மோதல் 150திற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி!

கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 150திற்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயமடைந்து, அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 112 ஆண்கள், இவ்வாறான மோதல் சம்பவங்களினால் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை,
வீட்டிற்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக ஆண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *