புதிதாக பரவும் மஞ்சள் பூஞ்சை நோயால் பரபரப்பு!

நாடு முழுக்க கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மஞ்சள் பூஞ்சை என்ற ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிதாக பரவும் White Fungus நோய்.. என்னென்ன அறிகுறிகள் இருக்கும்?

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரத்தில் நோயாளி ஒருவர் மஞ்சள் பூஞ்சை அதாவது YellowFungus நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

தீவிர லாக்டவுன் முதல் வேக்சின் வரை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு.. முதல்வர் ஸ்டாலின் 5 முக்கிய உத்தரவு!
மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவு நிபுணர் பிரிஜ் பால் தியாகி தலைமையிலான மருத்துவர் குழு அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

ஆபத்தானது
கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை ஆகியவற்றை விட மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். ஏனெனில், உடலில் ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டால் அது சரியாகி குணம் அடைவதற்கு மிகவும் காலம் பிடிக்கும் என்ற மோசமான நிலைக்கு மஞ்சள் பூஞ்சை, நோயாளிகளை தள்ளி விடும் என்கிறார்கள்.

சிகிச்சை என்ன?
உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது. எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பூஞ்சைக்கும் அம்போட்டெரிசின் பி, ஊசி செலுத்தி கொள்வது மட்டும்தான் தற்போதைய சிகிச்சை முறையாக இருக்கிறது. பிற பூஞ்சை நோய்களுக்கும் இந்த மருந்து ஊசியைதான் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்
மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகளாக, சோம்பல், பசி குறைவது அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு, நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

காரணம் என்ன?
மோசமான சுகாதார சூழ்நிலை இருந்தால்தான் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர். உங்களது வீடு மற்றும் நீங்கள் புழங்கக்கூடிய பகுதிகளை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்வது, இந்த பூஞ்சை நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும்.

கவனம் மக்களே
வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கழிவறை உரிய வகையில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மலம் கழிவறையில் தேங்கி இருக்கக்கூடாது. சாப்பிடும் பொருட்களிலும், கழிவு பொருட்களிலும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *