சுவாசக்காற்றை வைத்து கொரோனாவை கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு!

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இக்கருவி மூலம் ஒருவரது சுவாசக்காற்றை வைத்தே அவருக்கு கொரனா தொற்று உள்ளதா இல்லையா என்பதனை துரிதமாக கண்டறிய முடியும் , இந்த கருவியை வைத்து, முதற்கட்டமாக சுமார் 118 நோயாளிகளை பரிசோதித்த நிலையில் , சில நிமிடங்களில் அவர்களுக்கு தொற்று இருப்பதை உறுதி செய்து தரவு அனுப்பியுள்ளதும் அது 95% சரியானதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை அடுத்து துபாய் நாட்டிலும் இந்த ப்ரீதோநிக்ஸ் கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தடுப்பூசி போட வருகிறவர்களுக்கு கோவிட் டெஸ்ட் எடுத்த பின்னரே ஊசி போடப்படவேண்டும் என்ற அடிப்படையில் , ஸ்வாப் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக 24 மணிநேரம் காத்திருக்கவேண்டியிருந்த நிலையில் , சிங்கப்பூர் தயாரித்த இக்கருவி மூலம் உடனே ரிசல்ட் கிடைத்துவிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *