இஸ்லாமியப் பெண் இறக்கும் முன் கலிமா சொல்லிய இந்து மருத்துவர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு இந்து மருத்துவர் இஸ்லாமிய பிரார்த்தனையான கலிமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மதத்தை சேர்ந்தந் டாக்டர் ரேகா கிருஷ்ணா, துபாயில் பிறந்த வளர்ந்து, தற்போது கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதிய இஸ்லாமிய பெண்மனிணியின் நிலையைக் கண்டு கண்கலங்கிய டாக்டர் ரேகா, இஸ்லாமியர்கள் இறக்கும் நேரத்தில் கூறப்படும்  காலிமா என்ற பிரார்த்தனையை அவரது காதில் கூறினார். இதையடுத்து அந்த முதிய பெண்மணி திருப்தியுடன் இயற்கை எய்தினார்.இந்து மருத்துவர் ஒருவர் இஸ்லாமிய பிரார்த்தனை செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கூறிய மருத்துவர் ரேகா கிருஷ்ணா, தான் துபாயில் பிறந்து வளர்ந்தாலும், அங்குள்ள மதச்சடங்குகள் மற்றும் பிரார்தனைகள் தனக்கு தெரியும். என்று கூறினார்.

அத்துடன், மருத்துவம் செய்யும்போது நான் வேறுபாடு பார்ப்பதில்லை. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் தங்களது சொந்த பந்தங்களைக்கூட பார்க்க முடியாத நிலையில், உயிர் துறந்து வரும் சோகம் ஏற்பட்டு வருகிறது.
அதுபோல ஒரு நிலையில் தான், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இஸ்லாமிய பெண்மணி, திருப்தியுடன் இயற்கை எய்தும் வகையில், அவருக்கு காலிமா ஓதினேன் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் மனிதாபிமானம் மிக்க இந்த செயலுக்கு பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *