IPL போட்டிகளில் விளையாட தயாராகும் பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்து வந்த முகமது அமீர். 29 வயதான இவர், பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒரு நாள் போட்டி மற்றும் 50 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். தனது ஓய்வுக்கு பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனஸ் உள்ளிட்டோர் தான் காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், முகமது அமீர் அளித்துள்ள பேட்டி: இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மாவுக்கு பந்துவீசும்போது நான் எவ்வித சிரமங்களையும் சந்தித்ததில்லை.

ரோகித் சர்மா இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் இன் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக கஷ்டப்படுவார். அது அவரது மிகப்பெரிய பலவீனம். அவுட் ஸ்விங் பந்தை வேகமாக வீசினாலும் திணறுவார். இதனால், அவருக்குப் பந்துவீசுவது எனக்குக் கடினமாக இருந்ததில்லை. அவருடன் ஒப்பிடும்போது கோஹ்லிக்கு பந்துவீசுவது கடினம் என்றாலும், அவ்வளவு கடினம் எனச் சொல்லிவிட முடியாது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஸ்மித்திற்கு பந்துவீசுவதுதான் மிகக் கடினம். அவரது பேட்டிங் ஸ்டைல் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும். அவர் நிற்கும் ஆங்கிளுக்கு ஏற்றதுபோல் பந்துவீசுவது சவாலானது.

அதை என்னவென்றே புரிந்துகொள்ள முடியாது. அவுட் ஸ்விங் வீசினால் பந்தைத் தொடமாட்டார். அதே இன் ஸ்விங் வீசினால், தடுப்பாட்டத்தை ஆடுவார். அவரது அந்த பேட்டிங் ஸ்டெய்ல்தான் பந்துவீச்சாளர்களுக்கு பிரச்னை. அபாரமான பேட்ஸ்மேன், என்றார். முகமது அமீர் தற்போது இங்கிலாந்து குடியுரிமை பெறவுள்ளார். அது சாத்தியமாகும் பட்சத்தில் அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும். அவர் அடுத்த 7 வருடங்கள்வரை டி20 லீக் தொடர்களில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் முகமது அமீர் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *