முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி நாள்!

1991 மே 20… விடியற் காலை ஏழரை மணிக்கே நானும் ராஜீவும் ஓட்டுப் போட்டுவிட்டு வந்தோம். வீடு திரும்பும்போது “நீண்ட வாக்குச் சீட்டில் காங்கிரஸ் சின்னம் எங்கிருக்கிறது என்று புரியாமல் குழம்பி விட்டேன். ஓட்டுப் போடாமலேயே வீடு திரும்பி விடுவேனோ என்று கூடப் பயந்துவிட்டேன்” என்று நான் சொன்னபோது ராஜீவ் வாய்விட்டு சிரித்து விட்டார்.

என்னுடைய கைகளைப் பிடித்து இதமாக வருடிவிட்டார். நான் பரபரப்பு அடையும் போதோ, என் மனது புண்பட்டு விட்டாலோ அப்படிச் செய்வது அவரது வழக்கம்.

தேர்தல் சுற்றுப் பயணத்துக்குக் கிளம்பும் நேரம். ஹெலிகாப்டரில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு மாலை டெல்லிக்குத் திரும்பி, உடனே பிளேனில் ஒரிஸ்ஸா கிளம்ப வேண்டும். அன்று மாலை நாலேகால் மணிக்கு எங்களுக்கு ஒரு இதமான அதிர்ச்சி. வீட்டுக்கு ராஜீவ் வருகிறார் என்று தகவல்.

இந்த விசிட்டை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் ஜாலியாக அரட்டை அடித்தோம். அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு டிபன் சாப்பிட்டார்.

வெளிநாட்டில் இருக்கும் ராகுலுக்கு போன் செய்து தேர்வை நன்றாக எழுதும்படி கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிரியங்காவுக்கு குட்பை சொன்னார். என்னிடம் “இன்னும் இரண்டே நாட்கள்தான் வேலை” என்று சொல்லி உற்சாகமாக குட்பை சொன்னார்.

ராஜீவ் புறப்பட்டு விட்டார். ஜன்னலை மறைக்கும் கர்ட்டனை விலக்கிவிட்டு அவர் என் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்!

அதோ… அதோ, ராஜீவ் என் பார்வையில் இருந்து வெகுதூரம் போய் விட்டார்.

– சோனியா காந்தி எழுதிய ‘ராஜீவ்’ புத்தகத்திலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *