இலங்கையில் ஒரே நாளில் 3623 பேருக்கு கொரோனா 36 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று 3623 பேருக்கு கொரோனா மேலும் 36 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (19) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,015 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 36 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,051 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 3 பேர் இன்றும் (19), 10 பேர் நேற்றும் (18), 13 பேர் நேற்று முன்தினமும் (17), மே 16 இல் 3 பேரும், மே 14இல் ஒருவரும், மே 13இல் 5 பேரும், மே 06 இல் ஒருவரும்  மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1,016ஆவது மரணம்
ஹொரணை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே  மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

1,017ஆவது மரணம்
எம்பிலிப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய பெண் ஒருவர், எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,018ஆவது மரணம்
நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் உயர் குருதியழுத்தத்தால் இதயம் மற்றும் சுவாசத்தொகுதி செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

1,019ஆவது மரணம்
புசல்லாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,020ஆவது மரணம்
மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய பெண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,021ஆவது மரணம்
மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட  62 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 16 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே  மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

1,022ஆவது மரணம்
வென்னொருவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், நாரம்மல வைத்தியசாலையில் இருந்து தம்பதெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்; 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,023ஆவது மரணம்
பன்னல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

1,024ஆவது மரணம்
இரத்மலானை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, உயர்குருதியழுத்தம், குருதி நஞ்சானமை மற்றும் இதயநோய் நிலைமைகளே  மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

1,025ஆவது மரணம்
இராஜகிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 54 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், இருதயநோய் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

1,026ஆவது மரணம்
வத்தள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இருதய நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

1,027ஆவது மரணம்
கலபிட்டமட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய ஆண் ஒருவர், வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,028ஆவது மரணம்
துல்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா  நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,029ஆவது மரணம்
அஹங்கம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், கொன்னகஹஹேன  வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது 2021 மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,030ஆவது மரணம்
ஊரபொல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், தொம்பே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்  2021 மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,031ஆவது மரணம்
கட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியர் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,032ஆவது மரணம்
செவனகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர், எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியர் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,033ஆவது மரணம்
தெலிகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர், கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,034ஆவது மரணம்
எஹலியகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே  மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,035ஆவது மரணம்
நிக்கபொத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், தியதலாவ ஆதார வைத்தியசாலையில் இருந்து பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்க மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே மாதம் 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமடைந்த கொவிட் நியூமோனியா நிலைமையால் பல உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் சுவாசக் கோளாறு நிலைமைகளே  மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

1,036ஆவது மரணம்
பேராதனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 16 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா  நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,037ஆவது மரணம்
பெல்லபிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இருந்து இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமான கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,038ஆவது மரணம்
ஹொரணை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே  மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,039ஆவது மரணம்
பண்டாரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 17 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நெஞ்சுத் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,040ஆவது மரணம்
இங்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட  64 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 17 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நெஞ்சுத் தொற்று, நீரிழிவு மற்றும் நாட்பட்ட ஈரல் கல நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,041ஆவது மரணம்
பேராதனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வற்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,042ஆவது மரணம்
குன்னேபான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,043ஆவது மரணம்
கிந்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 31 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 17 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,044ஆவது மரணம்
இமதூவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,045ஆவது மரணம்
தல்பே வடக்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்; 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,046ஆவது மரணம்
ரத்கம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,047ஆவது மரணம்
தல்கஸ்வல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 27 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,048ஆவது மரணம்
எல்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 51 வயதுடைய ஆண் ஒருவர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,049ஆவது மரணம்
பயாகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,050ஆவது மரணம்
வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,051ஆவது மரணம்
ஹேனகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 96 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 18 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *