5G தொழில்நுட்பம்தான் கொரோனா பரவலுக்கு காரணம்?

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காரணம் 5G தொழில்நுட்பம் காரணம் என்று கூறியதையடுத்து, இதற்கு இந்திய தொலைத்தொடர்புதுறை விளக்கமளித்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்து தற்போது உலக நாடுகளை அனைத்தையும் கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவை மிகவும் மோசமாக பாதித்து வருகின்றது.

இந்தியாவின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அதிகமாக உயிரிழக்கவும், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

கொரோனா தீவிரமாக பரவிவிட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதற்குக் காரணம் 5G தொழில்நுட்பம் தான் காரணம் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவியது.

இந்நிலையில் 5ஜி தொழிநுட்பத்துக்கும், கொரோனா பரவலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தொலைத்தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழில்நுட்ப சோதனை தொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் தவறானவை எனவும், இந்தியாவில் தற்போதுவரை 5ஜி தொழில்நுட்ப சேவை சோதனை செய்யப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *