பில்கேட்ஸின் அந்தரங்க பாலியல் உறவு அம்பலம்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் நீண்ட கால உறவு இருந்ததாக வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நடத்திய  விசாரணை இந்த தகவல் வெளி வருந்துள்ளது. அது மாத்திரம் அல்ல விசாரணை  முடிவதற்கு முன்பே பில் கேட்ஸ் போர்டிலிருந்து விலகினார்.

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் போர்டு உறுப்பினர்கள் 2020ம் ஆண்டே போர்டில் பில் கேட்ஸ் நீடிக்கத் தகுதியற்றவர், ஏனெனில் மைக்ரோசாப்ட் பெண் ஊழியருடன் பில் கேட்ஸ் வைத்திருந்த உறவு முறையானதல்ல என்று முடிவு எடுத்தனர் என்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.

பில் கேட்சுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே இருந்த உறவு குறித்து மைக்ரோசாப்ட் போர்டு விசாரணை நடத்த சட்ட நிறுவனம் ஒன்றை 2019-ம் ஆண்டு நியமித்தனர்.

அதாவது அந்தப் பெண் ஊழியர் பில் கேட்சுடன் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் உறவு உள்ளது என்று கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து இந்த விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத பில் கேட்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வால்ஸ்ட்ரீட் ஜர்னலிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உறவு இருந்ததாகவும் ஆனால் சுமுகமாக முடிந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் போர்டிலிருந்து விலகினார்.

இந்த மாதத் தொடக்கத்தில் பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து அறிவித்தனர். 27 ஆண்டுகால திருமண உறவை முடித்துக் கொண்டனர்.

ஆனால் அறகட்டளை பணிகளை இருவரும் சேர்ந்து மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தனர். இது உலகிலேயே மிகப்பெரிய அறக்கட்டளைகளில் ஒன்றாகும்.

பில் கேட்ஸ் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார், அவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பில் கேட்ஸின் இத்தகைய உறவுகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழும் சில விவரங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது மண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

பில் கேட்ஸ் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், 66, அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றார்.

மேலும், சிறுமியரை வைத்து மிகப் பெரிய பாலியல், ‘நெட்வொர்க்’ நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2019 ஆகஸ்டில், அவர் சிறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பில்கேட்ஸின் அந்தரங்க தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *