வைத்தியசாலையில் 05 வைத்தியர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா!

மாரவில ஆதார வைத்தியசாலையின் 20 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இடையில் 5 வைத்தியர்கள் மற்றும் 08 தாதியர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 5 வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களும் மற்றும் 2 குடும்ப நல ஊழியர்களும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *