நாங்கள் ஒன்றாக இணைந்து ஆக்கிரமிப்பை தோற்கடிப்போம்!

ஹமாஸின் தலைவர் காலித் மிஷ்அல் அரபு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் சாரம்.

ஆக்கிரமிப்பாளர்கள் சாதாரண வெற்றியை எதிர்பார்க்கிறார்கள் அவர்களால் அதனை அடைய முடியாது – காலித் மிஷ்அல்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏதாவதொரு வெற்றியை பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். எதிர்ப்பு படை அதனை ஒருபோதும் அனுமதிக்காது. ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடித்தே தீருவோம். காசாவில் நமது மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை அணுகும் விதம் வெற்றி மிக சமீபத்தில் இருக்கிறது அதற்காக கொஞ்சம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது என்றார்.

ஐநா பாதுகாப்பு குழு அரசியல் தலையீடுகளின் மூலம் அமைதியை நாட முயற்சிக்க முடியும். ஆனால் நாங்கள் அதற்கான தேதியை நிர்ணயிக்க போவதில்லை. எதிரிகளை துளி அளவும் நாங்கள் நம்புவதாயில்லை. உலகமே நமது அசையாத உறுதியை கண்டபின் நமது கதவுகளை தட்டத் தொடங்கியுள்ளனர்.

இயக்கத்தின் தலைமை அரசியல் நிலைமையை அதன் மக்கள் மற்றும் அவர்களின் எதிர்ப்பு போராட்டத்தை உறுதியாகவும், முறையாகவும் நிர்வகித்து வருவதாக காலித் மிஷ்அல் கூறினார். மேலும் அரசியல் பேச்சுவார்த்தையில் அனைத்து விவரங்களும் விவாதிக்கப்படுகின்றன. மேலும் தியாகங்கள் மற்றும் வீரர்களின் அர்ப்பணிப்புகளின் பலனை நாங்கள் அறுவடை செய்வோம் என்றார்.

அல்-அக்ஸா மற்றும் ஷேக் ஜர்ராவில் ஆக்கிரமிப்பை இஸ்ரேல் எவ்வாறு தொடங்கியது என்பதை இயக்கத்தின் தலைமை அனைத்து மத்தியஸ்தர்களுக்கும் விளக்கியது என்றும், இஸ்ரேல்தான் ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த போரட்டத்தின் முக்கியமான விடயம் என்னவென்றால், அது பாலஸ்தீனிய போராட்டத்திற்கான முகவரிகளுக்கு நம்மை மீண்டும் கொண்டு வந்துள்ளது. நிலம், ஜெருசலேம், புனித தலங்கள், ஆக்கிரமிப்பை திரும்ப பெறுவதற்கான உரிமை, எதிர்ப்பு போராட்டம் மற்றும் சிறைகளில் இருந்து கைதிகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை சமீதபத்திய போராட்டம் நமக்கு இணைத்துள்ளது. மக்கள் போராடுவதற்கான அடிப்படையான முக்கியத் தலைப்புச் இவைதான்.

  • நாங்கள் ஒன்றாக இணைந்து ஆக்கிரமிப்பை தோற்கடிப்போம் *

ஜனாதிபதி அபு மசேன்(மஹ்மூத் அப்பாஸ்) கூற்றை மேற்கோள்காட்டிய காலித் மிஷ்அல் நாங்கள் ஆக்கிரமிப்பை ஒன்றாக இணைந்து தோற்கடிப்போம். எப்படி காசாவில் இருந்து ஆக்கிரமிப்பை துடைத்தெறிந்தோமோ அதேபோல மேற்கரை மற்றும் ஜெருசலேம் பகுதியில் இருந்தும் விரட்டியடிப்போம்.

மேற்கு கரையில் உள்ள பாதுகாப்பு சேவைகள் குறித்து மிஷ்அல் கூறும்பொழுது, இதுதான் பழிவாங்கல் மற்றும் பதிலடி கொடுப்பதற்கான சரியான தருணம், மற்றும்
ஆக்கிரமிப்பு படையுடன் வெளிப்படையான மோதல்கள் மற்றும் கிளர்ச்சி வெடிப்பதற்கான நேரம். இதனை 1996ல் சுரங்கப் பாதை தாக்குதல் பரிசின் மூலம் பற்றவைத்த அபூ அம்மார்
நினைவுக்கு வருகிறார்.

இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, நாங்கள் எங்கள் பாலஸ்தீனிய வீட்டை சரியான முறையில் ஏற்பாடு செய்வோம், அதன் பின் தேர்தல்களை நடத்துவோம் அரசியல் பொறுப்பில் , முடிவில் பங்காளிகளாக இருப்போம் என்ற மிஷ்அல் வலியுறுத்தினார்.

  • பரிசு உள்ளே இருக்கிறது *

48 நிலங்களில்
பாலஸ்தீனியர்களுக்கான பரிசு கிடைத்திருக்கிறது.
எல்லா இடங்களிலும் நம் மக்கள் தியாகம், நம்பிக்கைகள் மற்றும் வேதனைகளில் பகிர்ந்து கொண்டதன் விளைவாய் இந்த பரிசு உறுதிப்படுத்துயுள்ளதாக என்று மிஷ்அல் கூறினார்.

48 நிலங்களில் உள்ள எங்கள் மக்கள் இனவெறி கொள்கைகள் மற்றும் துன்புறுத்தல் மற்றும் இடம்பெயர்வு முயற்சிகளுக்கு பதிலளித்துள்ளார்கள். உள் விவகார குடும்ப மோதல்களைத் தூண்டுவதற்கு ஆயுதங்களை வழங்க முயற்சித்தவர்களை நெருப்புடன் விளையாட வேண்டாம் என மிஷ்அல் எச்சரித்தார்.

ஜோர்டான், லெபனான், கோலன் ஹைட்ஸ் மற்றும் எகிப்து நாடுகள் எங்கள் மக்களுடன் ஆதரவாக இருப்பதற்கு மிஷ்அல் பாராட்டினார், சில அரபு நாடுகளிலிருந்து கௌரவமான ஆதரவு நிலைப்பாடுகள் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *