ரமழான் மற்றும் வெசாக் பண்டிகையை பொறுப்புடன் கொண்டாடுவோம்!

இந்த வைகாசி மாதத்தில் அனேக இலங்கையர்களுக்கு இரண்டு முக்கியமான சமய விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இவ்வாரத்தில் ரமலான் திருவிழாவும், இம்மாதக் கடைசி வாரத்தில் வெசாக் திருவிழாவும் இடம்பெற உள்ளது.

தத்தமது சமய நம்பிக்கைகளின் அடிப்படையில், பௌத்த மற்றும் இஸ்லாமிய மக்களும் இம்முறை இரண்டு சிறப்பு மத விழாக்களையும் அதிக கோவிட் தொற்று ஆபத்தான காலத்தில் கொண்டாட வேண்டியுள்ளது. கடந்த காலங்களில், இந்த விழாக்கள் வழக்கமாக ஏராளமான மக்கள் மதத்தலங்களில் ஒன்று கூடி கொண்டாடப்பட்டன, ஆனால் இந்த முறை இச்சமய விழாக்கள் முன்னரைப் போலல்லாது மிகவும் அர்த்தமுள்ள வகையிலும் தமது சமய போதனைகளுக்கு ஏற்பவும் தத்தம் குடும்பத்தினருடன் மாத்திரம், மிக உளப்பூரவமாக கொண்டாட இலங்கை மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ஏராளமான இலங்கையர்கள் நோய் மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நம்முடைய சொந்த சகோதர சகோதரிகளுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இரவு பகலாக உழைக்கும் சுகாதார ஊழியர்களுக்கும், பாதுகாப்பு துறையினருக்கும் ஏனைய சேவைகளை வழங்கும் சகல சகோதர சகோதரிகளுக்கும் நாம் வழங்கக்கூடிய சிறந்த ஆதரவு யாதெனில் முடிந்தவரை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இயலுமானவரை வீட்டின் உள்ளேயே தங்கி இருத்தலும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *