பயணக் கட்டுப்பாடு குறித்து இன்று எடுக்கப்பட்டுள்ள மூன்று முடிவுகள்!

01) இன்று தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை (ஊரடங்கு உத்தரவுக்கு சமனானது). ஆனால் குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி – இராணுவத் தளபதி

02) நாளை(13) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் (மூன்று நாள்) நாடு பூராகவும் பயணத் தடை (ஊரடங்கு உத்தரவுக்கு சமனானது) ஆனால் குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி – இராணுவத் தளபதி

03) நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் வெளியே செல்ல முடியும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *