இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுல்!

மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும்.

✍ முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

✍ அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.

✍ சுற்றுலா, உறவினர்களை சந்தித்தல், ஹோட்டல்களில் தங்குதல் உட்பட தனிப்பட்ட விடயங்களுக்காக மாகாணங்களில் இருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

✍ மாகாண எல்லையை கடப்பதற்கு குறுக்கு வழிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

✍ மாகாண எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள். நீங்கள் வழங்கும் தகவல்கள் திருப்தியில்லையெனில் அவர்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

✍அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்களுக்கு வெளி மாகாணங்களில் தங்கவேண்டிய தேவையேற்படின் அது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதி பெறவேண்டும்.

✍ கூட்டம், கருத்தரங்கு, கண்காட்சி, சமய நிகழ்வுகள், விருந்துபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், அனுமதி வழங்கியவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

✍ மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி பத்திரம் எதுவும் வழங்கப்படாது.

✍மாகாண எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாது. அவ்வாறு வழங்கினால் உரிமையாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

✍ மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடு மே 30 ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும்.

✍ நாட்டிலுள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். தொழில் நிலையங்களில் சுகாதார வழிகாட்டல்கள் உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும்.

✍ நாளை முதல் வாகனங்கள் தீவிரமாக சோதிக்கப்படும். ஆட்டோக்களில் இருவர் மட்டுமே பயணிக்கலாம். முகக்கவசம் அணிவது கட்டாயம்.

✍ பொலிஸ் அதிகாரிகள் அனைவரினதும் விடுமுறை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை இரத்து. தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தல் காலம் முடியும்வரை தொழிலுக்கு வரவேண்டியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *