மருந்து வகைகளை வீட்டிற்குக் கொண்டுவர தொலைபேசி எண்கள்!

அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவுகின்ற கொவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்இ இச் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக சில தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு 1 இல் உள்ளவர்கள் 0701902740 என்ற இலக்கத்திற்கும், கொழும்பு 4 இல் உள்ளவர்கள் 0701902741 என்ற இலக்கத்திற்கும், மற்றும் கொழும்பு 7 இல் உள்ளவர்கள் 0701902742 என்ற இலக்கத்திற்கும்அழைப்பை மேற்கொண்டு தேவையான மருந்துகள் தொடர்பான விபரங்களை தெரிவிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *