பைபிள் ஓதி முயல்களுக்கு திருமணம!

மனிதர்களுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைப்பதுபோல் உறவினர்கள் புடைசூழ முயல்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் இணையதளத்தை கலக்கி வருகிறது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வறட்சி காலங்களில் மழை பொழிவதற்காக இறைவனை வேண்டி கழுதை மற்றும் தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை பார்த்திருக்கிறோம். முயல்களுக்கு திருமணம் செய்துவைப்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், ஆனால், இரண்டு முயல்களுக்கு கிறிஸ்துவ முறைப்படி பாரம்பரிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு முயல் தம்பதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

டிவிட்டர் பக்கத்தில் யூடியூப் நிறுவனம் இந்த திருமண வீடியோவின் சிறிய பகுதி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருமணத்துக்கு தயாராக அலங்கரிக்கப்பட்டு இரண்டு முயல்கள் உள்ளன. அதனுடன், அந்த முயலை வளர்த்தவர்களும் இருக்கின்றனர். கிறிஸ்துவ முறைப்படி, திருமணத்துக்கான ஒப்பந்தத்தை பாதிரியார் படித்தவுடன், அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவார குரல் எழுப்புகின்றனர். அதனைத்தொடர்ந்து இரண்டு முயல்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. முயல் கணவர், முயல் மனைவி என அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்ப திருமண விழாவில் உற்சாகம் ஏற்படுகிறது.

இதனையடுத்து புதிதாக திருமணம் செய்துகொண்ட முயல் தம்பதிக்கு, திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண வீடியோவின் சிறிய பகுதியை யூ டியூப் நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டது. முயல் திருமணத்தைப் பாரத்த பலரும் வீடியோவை உடனடியாக மற்றவர்களுக்கு பகிர ஆரம்பித்தனர். சில மணி நேரங்களில் 50 ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளை (Views) அந்த வீடியோ கடந்தது.

நெட்டிசன்கள் பலரும் முயல் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இது புதுமையானதாக இருப்பதாக சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். சடங்குகளை பின்பற்றுபவர்கள் விலங்குகளுக்கு இதுபோன்று திருமணம் செய்துவைப்பார்கள், முயல்களுக்கு திருமணம் செய்துவைப்பதை முதன்முறையாக பார்க்கிறோம், இதற்கு பின்னணி ஏதாவது இருக்கிறதா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். திருமணத்துக்கு பிறகு முயல்களை வளர்த்த உரிமையாளர்கள், முயல் தம்பதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மணமக்களான இரண்டு முயல்களும் சுமார் 3 அடி உயரத்தில் இருந்தன.

மணமகள் Roberto உலகத்திலேயே மிகப்பெரிய முயல் இனமாகும். இதன் உயரம் 3 அடி 6 இன்ச். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு விலங்குகளுக்கு திருமணம் செய்துவைப்பது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் இணையதளத்தில் உள்ளன. அண்மையில் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் தெரபி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *