இலங்கையில் நாளாந்தம் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200 ஐ எட்டுமாம்!

இலங்கையைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

பெரும்பாலான வைத்தியசாலைகள் கொரோனா நோயாளர்களினால் நிரம்பி வழிகின்றன. அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டில்களுக்கும் அதிக கேள்வி நிலவுகின்றது.

அதுபோக நேற்றைய ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் பல்வேறு வகையான திரிபுபட்ட கொரோனா வைரஸுகளின் தொற்றுக்களும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு திரிவுபட்ட வைரஸ்கள் மிகத் தீவிர தன்மை உடையவை.

அதேபோல் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையதளம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் இன்னும் சில மாதங்களில் இலங்கையில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200 ஐ எட்டும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வேறு நாடுகளைப் பற்றிய முன்னைய ஆய்வுகள் மிக துல்லியமாகவே இருந்தது.

எனவே நாம் இன்று எடுக்கும் முடிவே நாளை நாம் எவ்வாறு இருப்போம் என்பதை தீர்மானிக்கும்.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் எமது அன்புக்குரியவர்களின் இறந்த உடலைக் கூட காணமுடியாத துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்படாமல் இருப்பது நிச்சயமாக எமது கைகளிலேயே உள்ளது.

எனவே வீட்டினில் இருப்போம்!
அவசியமில்லாத பயணங்களைக் குறைப்போம்!
எம்மையும் எமது அன்புக்குரியவர்களையும் பாதுகாப்போம்!

Dr. விஷ்ணு சிவபாதம்
குழந்தை நல வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *