இலங்கையில் அதிக பட்ச கொரோனா மரணங்கள் 19 பதிவானது!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (07) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 745 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 19 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 764 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 4 பேர் (07), 8 பேர் (06), (04) 4 பேரும், ஏப்ரல் 06, 26, மே 04 ஆகிய தினங்களில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

746ஆவது மரணம்
சுனந்தபுர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய பெண் ஒருவர், குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் இரனவில கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த சிகிச்சை நிலையத்தில்  2021 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு, இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

747ஆவது மரணம்
இளவாலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்  2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

748ஆவது மரணம்
கோன்கஹவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், கோங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்  2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய், நாட்பட்ட சிறுநீரக நோய்  மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

749ஆவது மரணம்
இரத்மலானை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய், நாட்பட்ட சிறுநீரக நோய், மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

750ஆவது மரணம்
தெஹியத்தகண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 54 வயதுடைய பெண் ஒருவர், பண்டாரவெல  இடைநிலை சிகிச்சை நிலையத்தில் இருந்து  பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவுடன் குருதி நஞ்சானமை மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

751ஆவது மரணம்
பதுளை, மயிலகஸ்தென்ன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிந்துனுவெவ கொவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, மீண்டும் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட பின்னர் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவால் குருதி நஞ்சானமை மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

752ஆவது மரணம்
வாதுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  2021 மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவுடன் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

753ஆவது மரணம்
கொழும்பு 03 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  2021 மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

754ஆவது மரணம்
ரத்தொலுகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசற மார்புச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

755ஆவது மரணம்
ராகமை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 45 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் மினுவங்கொட ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்  2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

756ஆவது மரணம்
68 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 05 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய், இதயநோய் மற்றும் காச நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

757ஆவது மரணம்
போத்தல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 06 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

758ஆவது மரணம்
அலபலாதெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 50 வயதுடைய ஆண் ஒருவர், ஆராச்சிகந்த கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்  2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

759ஆவது மரணம்
போத்தல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், ஆராச்சிகந்த கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

760ஆவது மரணம்
அங்குலுகஹ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர்,  2021 மே 06 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

761ஆவது மரணம்
ஹிக்கடுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று கொவிட் 19 நியூமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.

762ஆவது மரணம்
அங்குலுகஹ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதியன்று கொவிட் நியூமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.

763ஆவது மரணம்
நுவரெலியா, ஹாவாஎலிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 05 ஆம் திகதியன்று நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

764ஆவது மரணம்
அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான -காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *