கிளிநொச்சியில் 24 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!

கிளிநோச்சி பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் 24 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *