சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

2020ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பௌதீக விஞ்ஞானப் பிரிவின் புதிய பாடத்திட்டத்தில் குறித்த மாணவன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது இசட் புள்ளி 2.9422 ஆகும்.

சரசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சுந்தர்பவன் ஒலிம்பியாட் போட்டியிலும் சாதனை படைத்து வெளிநாட்டுப் புலமைப் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *