நெல்லிக்காயின் மகத்துவம்!

பச்சை நெல்லிக்காயை இடித்து பத்து மில்லிக்கு குறையாமல் சாறு பிழிந்து
இதனோடு இதில் பாதி அளவு
எலுமிச்சை சாறு இதனுடன் கலந்து

எலுமிச்சை சாற்றின் அளவில் பாதியளவு தேன் கலந்து இதை தினந்தோறும் காலை வேலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் எந்த வைத்திய முறைக்கும் கட்டுப்படாத நாட்பட்ட சர்க்கரை நோயானது வெகு எளிதாக கட்டுப்படும்

இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இந்த நெல்லிக்காய் சாற்றினை பருகி வர சர்க்கரையின் அளவு எப்போதும் சமநிலையில் இருக்கும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வருவதால் கிடைக்கின்ற பயன்கள்

உடல் வெட்டைச்சூடு தணியும்
நல்ல ரத்தம் உற்பத்தியாகும்
விந்து ஸ்கலிதம் குணமாகும்
விந்து உற்பத்தி அதிகரிக்கும்

பார்வைத் திறன் உண்டாகும்
மனதில் ஏற்படும் பயம் விலகும் மனோதிடம் ஏற்படும்

உடல் வறட்சியை நீக்கி உடல் வெப்பத்தை தணிக்கும் அதிக தாகம் குணமாகும்

பித்த வாந்தி மற்றும் ரத்த வாந்தி நிவர்த்தியாகும் தலை மயக்கம் நீங்கும்

நுரையீரலுக்கு வலிமை ஏற்படும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலம் பெறும் ரத்தம் சுத்தமாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் சுவாச மண்டலம் சீராக இயங்கும்

எந்தவிதமான நோய்க்கிருமிகளும் சுவாசப் பாதையில் தொற்றாத வண்ணம் நமது உடலை காக்கும்

உடல் பிணிகள் அனைத்தையும் நீக்கி உடலில் நோய் வராமல் காக்கும்
ஒரு உன்னத மருத்துவம் இது

பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் இருந்பது கிராம் நெல்லி வற்றலை இடித்து இருநூறு மில்லி தண்ணீரில் கலந்து இதை ஐம்பது மில்லியாக சுண்டக் காய்ச்சி இதில் பத்து மில்லி எலுமிச்சை சாறும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து பருகி வந்தால் மேலே சொன்ன அனைத்து நோய்களும் நீங்கும் உடலில் எப்போதும் ஆரோக்கியம் நீடிக்கும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் சித்தர்களின் சீடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *