புதிய கொரோனா நியுமோனியா நிலைமைக்கு செல்லும் வரை அடையாளம் கான முடியாதாம்!

இலங்கையில் பரவும் கோவிட் வைரஸின் புதிய மரபணு தொற்றியவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னரே நியுமோனியா நிலைக்கு சென்று விடுவதாக சுகாதார விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்றின் ஊடாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதிய மரபணுவில் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் முகக் கவசம் அணிவசது கட்டாயமாகும். அதற்கயை கோவிட்டின் புதிய மரபணு, முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையுடன் ஒப்பிடும் போது மிக வேகமாக பரவுவதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிப்பட்ட கோவிட் மரபணு போன்று இல்லாமல் புதிய மரபணு காற்றின் ஊடாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் முகக் கவசமின்றி தங்கள் சூழலில் வெளியேற்றும் வைரஸ் ஒன்றரை மணித்தியாலங்கள் அங்கு நீடிக்கும். அந்த காலப்பகுதியில் அந்த இடத்திற்கு முகக் கவசமின்றி வரும் நபருக்கு அந்த காலப்பகுதியில் வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகமாக உள்ளதென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காற்றில் கோவிட் பரவும் என்பதனை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளமையினால், முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பரவிய கோவிட் ஒருவர் அல்லது இருவருக்கு தொற்றக்கூடும், எனினும் புதிதாக பரவியுள்ள கொரோனா குறைந்த பட்சம் 5 பேருக்காவது தொற்ற கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பரவிய கோவிட் தொற்றியவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் காணப்படும், அதற்கு முன்னர் ஈரல் பாதிக்கப்படும். எனினும் புதிய கோவிட் நியுமோனியா நிலைமைக்கு செல்லும் வரை அடையாளம் கான முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடடுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *