உடலை சுத்தம் செய்யும் பானங்கள்!

நமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடல் இந்த பூமியின் ஒரு அங்கம் என்பதால், பூமியில் உள்ள அனைத்தும் இந்த உடலிலும் இருக்கும். தண்ணீர், காற்று, மண் – போன்றவை உடலில் உண்டு.

உடலின் எடையில் 70 சதவீதம் தண்ணீர் தான். அதாவது தண்ணீர் இரத்தம், செல்கள், தோல், மூளை மற்றும் உள் உறுப்புகள் அனைத்திலும் உள்ளது. எனவே இந்த 70 சதவீதம் குறையாமல் பார்த்துக்கொள்ளுவது மனிதர்களின் கடமை. ஆரோக்கியம் என்பது அவரவர் கையில் தான் இருக்கிறது.
நமது உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டும். இதை தண்ணீர் கலந்த மற்ற பானங்களாகவும், பழங்களாகவும் அருந்தலாம்.
நமது உடலில் தோன்றும் நச்சுகளுக்கு முக்கிய காரணங்கள் – நாம் உண்ணும் உணவு; குடிக்கும் தண்ணீர்; வாழும் சூழ்நிலை; பழக்க வழக்கங்கள் போன்றவை.
இந்த நச்சுக்கள், வியர்வை, மலம், மூத்திரம் என்று வெளியேறி விடுகின்றன. அவை சரியாக வெளியேறவில்லை என்றால், பலவிதமான பிரச்சினைகளை உடல் சந்திக்க நேரிடுகிறது.
அதாவது –

 1. உடல் பருமன்
 2. செரிமானக்கோளாறுகள்
  03., தலைவலி
 3. மந்த நிலை
 4. உடல் சோர்வு;
 5. சருமம் சார்ந்த பிரச்சினைகள்
 6. சிறுநீரகங்கள் செயல் இழந்து போகுதல்
 7. ஆசன வாய் பிரச்சினைகள் இன்னும் பல.

இந்த நச்சுகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழி தண்ணீர் தேவையான அளவு அருந்துவது தான். இதில் எந்த அளவுகோலும் கிடையாது. இந்த தண்ணீர் தேவையானது உடல் எடைக்கு தகுந்தவாறு மாறுபடும். மேலும், உடல் உழைப்புக்கு தகுந்த மாதிரியும் மாறுபடும்.

நமது மூதாதையர்கள் இந்த நச்சுக்களை நீக்குவதற்கு இந்த வழிகளை பின்பற்றினார்கள்:

 1. மாதம் ஒரு நாள் உபவாசம்; இதன் மூலம் உடல் உள் உறுப்புகளுக்கு அதிக ஓய்வு கிடைக்கிறது.
 2. தண்ணீர் மட்டுமே அருந்துதல் – ஒரு நாள் மட்டும். இதனால், குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடுகின்றன.

வெறும் தண்ணீர் குடிப்பது சில சமயங்களில் நமக்கு அலுத்து விடும். இதற்கு இந்த மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். இப்படி நச்சுக்களை வெளியேற்றுவதற்கு பிரத்யேகமாக நாம் குடிக்கும் பானங்களை detox drinks என்று சொல்லுவார்கள்.

 1. எலுமிச்சை ஜூஸ்: தண்ணீரில், எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடிக்கலாம். உடல் குளிர்ச்சியடையும். சூடு குறையும்.
  02 எலுமிச்சை – தேன்: இங்கு சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக்கொள்ளலாம். உடல் பருமனை குறைக்கும்.
 2. எலுமிச்சை – புதினா இலை – இஞ்சி: இங்கு எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை தண்ணீருடன் கலந்து மிக்சியில் அரைத்து விட்டு அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம். கொழுப்புகள் குறையும்; பருமன் குறையும்; செரிமான சக்தி கூடும்.
 3. பட்டை பொடி – தண்ணீர்: வெது வெதுப்பான தண்ணீரில் பட்டை பொடியை கலந்து குடிக்கலாம். உடல் பருமன் குறையும்.
 4. வெள்ளரிக்காய் – புதினா – தண்ணீர்: வெள்ளரித்துண்டுகள் மற்றும் புதினா இலைகளை தண்ணீரில் கலந்து மிக்சியில் மிதமாக அரைக்கவேண்டும். உடனே அருந்தாமல், இந்த சாறு அடியில் தங்கும் வரை விடவேண்டும். அதன் பிறகு, அந்த தண்ணீரை குடித்து வரலாம். செரிமான சக்தியை கூட்டும்.
 5. இளநீர் – புதினா: இளநீருடன், புதினா இலைகள் சேர்த்து, சிறிதளவு சீரகம் கலந்து நன்றாக கலந்து பிழிந்து வடிகட்டிய பின்னர், அதன் சாற்றை குடிக்கலாம். நீர் இழப்பை சரி செய்யும். இளநீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும். பொட்டாசியம் கலந்துள்ளதால், எலும்பு வலுவடையும்.
 6. வெள்ளரி – எலுமிச்சை – புதினா சாறு: தண்ணீரில், எலுமிச்சை சாறு, புதினா சாறு வெள்ளரி துண்டுகள் மற்றும் தேன் கலந்து பிழிந்து சாப்பிடலாம். வெள்ளரியில் வைட்டமின் C அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
 7. நெல்லிக்காய் – எலுமிச்சை – இஞ்சி: தண்ணீருடன், கொட்டைகள் நீக்கப்பட்ட நெல்லிக்காய் துண்டுகள், இஞ்சி, எலுமிச்சை சாறு – தேன் தேவையான அளவு. நெல்லி மற்றும் இஞ்சி – இவற்றை நன்றாக அரைத்து பேஸ்ட் மாதிரி ஆக்கவேண்டும். இதை தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம். நெல்லிக்காயில் அதிகம் வைட்டமின் C உள்ளது. நச்சுக்கள் நீக்குவதில் நெல்லிக்காய்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
 8. கொத்தமல்லி – தேன் – எலுமிச்சை – தண்ணீர்: புதினாவிற்கு பதிலாக கொத்தமல்லி, மற்றும் எலுமிச்சை சேர்த்து தண்ணீருடன் மிக்சியில் வைத்து அரைத்து எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். உடல் எடை குறையும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

உணவே மருந்து. நாம் உண்ணுகின்ற காய்கறிகள், பழங்கள் போன்றவைகளில் அணைத்து வகையான மருந்துகளும் இருக்கின்றன. அவற்றை சரியான பக்குவத்தில் உண்ணும் பட்சத்தில் சிறந்த ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.

—::: :::—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *