வலம்புரி சங்கின் ரகசியம்!

வலம் புரி சங்கு என்பதை புரிந்து கொள்ள இலகு வழி காற்று உட்புகும் பகுதி வலது புறத்தில் இருப்பது தான்! வலம் புரி சங்கு இடது புறம் இருந்தால் இடம் புரி ! வேறு ஒரு இலகு வழி சொல்கிறேன் இதை இலகுவாக நினைவில் கொள்ளலாம் பொதுவாக சிலர் கையை நாம் சங்கு கை என சொல்வோம் காரணம் சிலர் கையில் எந்த பொருள் வாங்கினாலும் வாங்கியவருக்கு அந்த பொருள் குறைவு இல்லாமல் வளரும் அப்படி பட்ட வரை சங்கு கை என்று சொல்வார்கள் நம் வலது கையை மூடி கட்டை விரலை வெளியே நீட்டி வைத்து பாருங்கள் விரல்கள் மூடிய பகுதியை கவனித்து பாருங்கள் வலது கை சுட்டு விரல் இருக்கும் பகுதி சங்கின் தலை பகுதியாக நினைத்தால் கட்டைவிரல் பகுதி சங்கின் கால் பகுதி நீர் வெளியேறும் பகுதி நாம் குடிக்க தண்ணீர் தேவையை கையால் சைகை காட்டும் போது கட்டைவிரல் பகுதியை தான் நீர் குடிக்கும் பகுதியாக சைகை மொழி காட்டுவோம் அதன் படி கட்டைவிரல் சங்கின் கால் பகுதி இதில் விரல் மடங்கி இருக்கும் சுருள் பகுதி இருக்கும் இடமும் வலம் புரி சங்கின் சுருள் பகுதியும் ஓத்து இருப்பதை பார்த்தால் இலகுவாக புரிந்து கொள்ளலாம் (கையில் உள்ள மூன்று விரல் போல் சங்கில் மூன்று கோடுகள் இருக்கும் அதை மூம்மூர்த்தி அடையாளம் என்று சொல்வது உண்டு) இதே கணக்கில் இடது கையை மடக்கி பார்த்தால் இடம் புரி புரியும் காற்று உட்புகும் பகுதியை கொண்டே வலம் இடம் புரி சங்கு பெயரிட படுகிறது இதில் ஒன்றும் எந்த பிரம்ம ரகசியம் இல்லை! நம் உள்ளங்கை அளவே நமது இருதயம் இரு கை இணைந்த அளவே இரைப்பை இரு கைகளையும் நீட்டி நின்று அளந்தால் என்ன அளவோ அதுவே நம் உயரம் . கையில் கட்டை விரல் நுனியை முதல் சுண்டு விரல் நுனி வரை அளவு எடுத்து எட்டால் பெருக்கினால் என்ஜான் உடம்பு அளவு உள்ளங்கையில் உள்ள ரேகை நவகிரகங்களின் மேடு என உள்ளங்கை நெல்லி என சொல்வது நெல்லிக்காய் கையில் வைத்து இருப்பது என்று நாம் பழ மொழியை பல மொழியில் புரிந்து திரித்து திகைத்து வாழும் திசை மாறிய துருவங்களாக வாழ்கிறோம் நாம். சங்கு ஸ்தாபிதம் என்று நமது பூர்வீக வாஸ்து முறையில் உண்டு அப்படி சொல்லும் போது உண்மையான சங்கை ஸ்தாபிதம் செய்வது இல்லை சங்கை பலகையில் செய்து ஈசான்ய மூலையில் வைத்தார்கள் உண்மை யான சங்கு சுவாசிக்கும் எந்த சங்கு என்றாலும் காதில் வைத்து பாருங்கள் காற்றின் சுழற்சி அதில் சுழன்று ஓம் என்ற பிரணவ மந்திரம் தான் நம் காதில் விழும் (வீட்டில் இருக்கும் பிளாஸ்கை எடுத்து காதில் வைத்து பாருங்கள் அதிலும் காற்றின் அலை ஓசை கேட்கும்) மூச்சு விடும் ஒன்றை பூமியில் வைப்பது எப்படி நியாயம்? உயிர் வாழும் ஒரு உயிரை உயிருடன் புதைப்பது போல் தான் அது ! சங்கு ஸ்தாபிதம் பற்றி பழைய வாஸ்து புக் வயதான கட்டிட வேலை செய்யும் நபர்களுக்கு தெரியும் !

யானையை நாம் பிரணவத்தின் அடையாளம் என்று சொல்ல காரணம் அதன்முக அமைப்பு மற்றும் யானை மூச்சு விடுவது பிரனவத்தின் படி தான் மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும் ஒரே விலங்கு யானை மட்டுமே அதனால் தான் அதன் மூச்சு காற்று நம் மீது பட வேண்டும் என்று அதனிடம் சொன்னது ஆசீர்வாதம் வாங்க சொன்னார்கள் (அதற்கு ஏற்ப யானைக்கு இறைவனும் தும்பிக்கையை வழங்கிய கடவுளுக்கு நன்றி💃)
தமிழ் நாட்டில் தான் தாலிசென்டி மேட் வட இந்தியாவில் தாலிக்கு பதில் சங்கு வளையல் போடும் வழக்கம் உள்ளது சிவன் சக்தி இணைந்த திருமண பந்தம் என்பதை வெண் சங்கு வளையல் சிவன் ரூபமாகவும் சிகப்பு வளையல் சக்தி ரூபமாக சொல்லி இரு வளையல் மட்டுமே தாலி என்ற அடையாளம் அந்த வெண் சங்கு சிகப்பு வளையல் போட்டு இருந்தால் திருமணம் ஆனவர் என அடையாளம்.
சங்கை நம் வீடு எந்த திசை நோக்கி உள்ளதோ அந்த திசையில் தான் சங்கின் தலை பகுதியை வைத்து பூஜை செய்ய வேண்டும் வீட்டின் தலை பகுதியும் சங்கின் தலை பகுதியும் சரியாக இருக்கவேண்டும். பூஜையில் ஒரு சங்கு மட்டுமே வைத்து பூஜை செய்ய வேண்டும் நமக்கு இருப்பது ஒரு உடல் ஒரு உயிர் என்பதால் நம் மூச்சு காற்று சங்கின் மூச்சு காற்று இரண்டும் ஒன்றாக இருக்கும்.
அந்த காலத்தில் சங்கு மூலம் தான் குழந்தைகளுக்கு பாலுட்டும் போது வாயில் பயமின்றி கொடுக்கலாம் வாயில் வெட்டாமல் இருக்கும் தற்போது பாலாடை என்று சொல்லி வெள்ளி சங்கு என்றாலும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
சங்கு பற்றி எழுதினால் எழுதி கொண்டே போகலாம் சேஷாத்திரி சுவாமி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் காஞ்சி வரதர் தேர் திருவிழா அன்று அவர் அன்னை அழைத்து போன போது அவர் நின்ற இடத்தில் ஒரு பொம்மை வியாபாரி பொம்மை விற்பனை செய்து கொண்டு இருந்தாராம் குழந்தை ஆசையாக அந்த பொம்மையை கைகாட்டி கேட்ட போது அவர் அன்னை காசு இல்லாமல் வாங்கி தரவில்லை இதை கவனித்த அந்த வியாபாரி வியாபாரம் எதுவும் இல்லை குழந்தை ஆசைப்பட்டு கேட்டு வாங்கி கொடுத்த வசதி இல்லை என புரிந்து கொண்டு குழந்தைக்கு ஒரு பொம்மையை எடுத்து கொடுத்தார் அன்று இரவுக்குள் அவர் அத்தனை பொம்மையும் விற்பனை ஆன உடன் அந்த வியாபாரி இரவு குழந்தை வீட்டை தேடி பிடித்து வந்து விட்டார் அம்மா இந்த குழந்தை தெய்வ குழந்தை சங்கு கை ! தங்க கை! என் வாழ் நாளில் இப்படி ஒரு வியாபாரம் நடந்ததே இல்லை அத்தனை பொம்மையும் விற்பனை ஆகி விட்டது என்று குழந்கையில் கையில்பத்து ரூபாய் பணம் கொடுத்து விட்டு போனார்.
(சங்கு அல்லது சிப்பிகளை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு எலுமிச்சை சாறு கலந்து பத்து நாட்கள் வைத்தால் சங்கு கரைந்து விடும் அதன் பிறகு அந்த சாற்றை ஒரு பஞ்சில் தொட்டு தேமல் படை மரு கரும்புள்ளிகள் மீது தடவினால் தோல் மருத்துவரை அணுக தேவையில்லை.

-வரலாற்று தகவல்கள்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *