நாட்டை முடக்க தீர்மானிக்கவில்லை !

நாட்டை முழுமையாக முடக்கும் அல்லது ஊரடங்கு பிறப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்க வில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்ப்பட வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
புத்தாண்டு கலியாட்டங்கள் இடம்பெற்ற இடங்களிலும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சுட்டங்கள் மற்றும் அதிக மக்கள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகளை தடுப்பதுடன், அவசியமற்ற பயண நடவடிக்கைகளை தவிர்த்து செயற்படுமாறும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *