நுரையீரலில் உள்ள சளியை விரட்டும் சித்தரத்தை!

  • இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும். குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.

கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்.

சித்தரத்தை சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர்விட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டால் இருமல் போகும்.

சிறிய இரண்டு துண்டு சித்தரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

சித்தரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது. இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு, அதன் மாறாத குணம் முக்கியம்.

வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும். இதற்கு வலியை நீக்கும்தன்மையும் உண்டு. மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தை சீராக்கும். தசை பிடிப்பை நீக்கும். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் சித்தரத்தையை இடித்து, கஞ்சியில் கலந்து சாப்பிடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *