இந்தியாவில் கொரோனா அதிதீவிரம் ஒரே நாளில் 3.14 இலட்சம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிதீவிரம் அடைந்துள்ளதால் எந்த நாடுகளிலும் இதுவரை பாதிக்காத அளவுக்கு தினசரி கொரோனா தொற்று 3.14 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,14,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த நாட்டிலும் பதிவு செய்யப்படாத மிக அதிகமான ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி அமெரிக்காவில் தினசரி தொற்று 3,07,581 ஆக பதிவானது தான் உலகின் அதிகபட்ச தொற்றாக இருந்தது. இதனை தற்போது இந்தியா வென்று இருக்கிறது. அமெரிக்காவில் 65 நாட்களில் தான் தினசரி தொற்று 1 லட்சத்தில் இருந்து 3 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. ஆனால் இந்தியாவில் வெறும் 17 நாட்களில் தினசரி கொரோனா தொற்று 1 லட்சத்தில் இருந்து 3 லட்சத்தை கடந்து நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தினசரி தொற்றினை போலவே உயிரிழப்புகளும் இந்தியாவில் அதிகரித்துள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் சிகிச்சை பலனின்றி 2,104 பேர் உயிரிழந்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *