இப்போது நாம் வாழும் உலகம் கலியுகம்!

பண்டைய நூல்களில் 4 யுகங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவை கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்றவை. ஒவ்வொரு யுகமும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளைக் கொண்டிருக்கும். அதில் கலியுகம் மிகவும் சக்தி வாய்ந்தது. கலியுகம் என்றால் சனியுகம் என்று நம்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இப்போது நாம் வாழும் உலகம் கலியுகம் என்பதால், இந்த கலியுகம் அழிவது குறித்து ஏற்கனவே வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலியுகம் அழியக் போகிறதெனில், என்னென்ன மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழும் என்பது குறித்தும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு நாம் வாழும் உலகம் அழியப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறி #1
மதம், உண்மை, தூய்மை, சகிப்புத்தன்மை, கருணை, வாழ்நாள் அளவு, உடல் வலிமை மற்றும் நினைவாற்றல் போன்றவை நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வரும்.

அறிகுறி #2
கலியுகத்தில், ஒரு மனிதனின் நல்ல பிறப்பு, சரியான நடத்தை மற்றும் சிறந்த பண்புகள் போன்றவை அவனது செல்வத்தைக் கொண்டு கருதப்படும். மேலும் சட்டமும், நீதியும் ஒருவரது அந்தஸ்தைக் கொண்டே செயல்படுத்தப்படும்.

அறிகுறி #3
மக்களின் மனநிலை மிகவும் மோசமாக இருக்கும். ஆண்களும் பெண்களும் வெறும் வெளிப்புற ஈர்ப்பினால் மட்டும் ஒன்றாக வாழ்வார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்ற ஆரம்பிப்பார்கள். குடும்பம் மற்றும் திருமணம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் இருப்பார்கள்.

அறிகுறி #4
இயற்கை சீற்றங்களான சுனாமி, நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டு, நிலப்பகுதியை நீர்ப்பகுதி ஆக்கிரமிக்கும்.

அறிகுறி #5
மக்கள் அளவுக்கு அதிகமாக குளிர், காற்று, வெப்பம், மழை மற்றும் பனிப்பொழிவால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாவார்கள். மேலும் கடுமையான பல்வேறு நோய்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, இறப்பை சந்திப்பார்கள்.

அறிகுறி #6
மக்களிடையே போட்டிகள், பொறாமைகள் போன்றவை அதிகரித்து, அதனால் மற்றவர்கள் வாழ்க்கையை கெடுக்கிறோம் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல், சுயநலவாதிகளாகவே இருப்பார்கள்.

அறிகுறி #7
பணத்திற்காக மனசாட்சிக்கு விரோதமாக நடந்து, ஒருவரை ஒருவரை அழித்து வாழ ஆரம்பிப்பார்கள். முக்கியமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்குட்பட்டு மோசமாக நடத்தப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *