அரசுக்குள் குழப்பம் பிரதமர் மஹிந்த இன்று அவசர சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று மாலை 6.30 இற்கு நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணிக்குள் அண்மைக்காலமாக முறுகல் நிலை நீடித்துவருகின்றது. இதனால் அரசுமீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலமும் சர்ச்சைக்குரிய காரணியாக மாறியுள்ளது. இதற்கு விஜயதாச ராஜபக்ச உட்பட ஆளுங்கட்சியிலுள்ள எம்.பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேரர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பை வெளியிட்ட தன்னையும், முறுத்தெட்டுவே ஆனந்த தேரரையும் ஜனாதிபதி அச்சுறுத்தினார் என விஜயதாச எம்.பி. வெளியிட்ட தகவலும் தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நெருக்கடி நிலைமை சமாளிப்பதற்கும், மோதல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் குறித்த சட்டமூல விவகாரத்தை பிரதமர் மஹிந்த கையில் எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இன்று நடைபெறும் சந்திப்பின்போது மாகாணசபைத் தேர்தல் சட்டமூலம் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *