டெங்குவை எதிர்த்துப் போராடக்கூடிய நுளம்பை உருவாக்கி இலங்கை மாணவர் சாதனை!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவினர் டெங்கு வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய முதல் நுளம்பை உருவாக்கியுள்ளனர்.
இலங்கையில் ஒரு விலங்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட முதல் மரபணு மாற்ற ஆராய்ச்சி இதுவாகும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரசாயனவியல் இளங்கலை விஞ்ஞானி காளிந்து ரம்யாசோமா அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரணில் தசநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் தனது கலாநிதிப் பட்ட ஆராய்ச்சித் திட்டமாக இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளார்.

இந்த ஆராய்ச்சி இன்னும் முதல் மட்டத்தில்  உள்ளது. அங்கு அவர்கள் டெங்கு வைரஸின் இரண்டாவது மற்றும் நான்காவது விகாரங்களை மட்டுமே எதிர்த்துப் போராட முடிகிறது. வைரஸ்களின் அடுத்த இரு குழுக்களுக்கு எதிராகப் போராட அடுத்த கட்டங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாக பேராசிரியர் ரணில் தசநாயக்க கூறினார்.

தற்போது வரை இலங்கையில் மரபணுப் பொறிமுறை பெரும்பாலும் பழங்கள், காய்கறிகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் விலங்குகளை உருவாக்கவோ அல்லது பரிசோதனை செய்யவோ எந்த மரபணு மாற்றமும் செய்யப்படவில்லை.

எனவே இவர்கள் மரபணு மாற்றம் மற்றும் நுளம்பு இனப்பெருக்கம் குறித்து வெளிநாட்டுப் பேராசிரியர்களிடமிருந்து ஆலோசனை பெற வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *