15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்முறை குற்றமாகும்!

பிரான்ஸ் நாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்முறை குற்றமாகும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூடிய பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகள் பாதுகாக்க ‘sexual act on a minor’ என்ற சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் மூலம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் உடலுறவு கொள்வது பாலியல் வன்முறையாகும் (Rape) எனவும், இந்த வயதிற்குட்பட்ட குழந்தையின் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் அது பாலியல் வன்முறையாகும் என இச்சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்ற சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இந்த குற்றச் செயலில் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே குற்றவாளிகள் மீது பாலியல் வன்முறை வழக்கில் தண்டனை அளிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள ‘sexual act on a minor’ சட்டத்தின்படி 15 வயதிற்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளிடம் யாராவது உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்முறையாகும் மற்றும் இந்த செயலில் ஈடுபடும் நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். அதேபோல் 18 வயதிற்குள் உள்ளவரின் விருப்பம் இல்லாமல் ஈடுபடும் உடலுறவும் பாலியல் வன்முறையாக இச்சட்டம் கருதுகிறது.

பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே 2018-ம் ஆண்டு பாலியல் வன்முறை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெண்களின் தவறாக நடந்துகொள்ளும் நபர்களிடம் உடனடி அபராதம் விதிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *