ரமழான் பீரங்கி!புனித மக்காவிலுள்ள மலை முகட்டின் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பீரங்கி  பல நூற்றாண்டு பழமையானது. துருக்கி ஒட்டமான் எனும் உதுமானிய அரசுக்கு சொந்தமானது.

ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாதம் முடிந்து ரமழான் தலைப் பிறை தென்பட்டவுடன் மக்களுக்கு அறிவிப்பதற்க்காக பீரங்கியை வெடிக்கச் செய்வது வழக்கம்.

ரமழான் காலங்களில் சஹர் தொடங்கும் போது ஒருமுறையும், சஹர் முடிவடையும் போது இருமுறையும், நோன்பு திறக்கும் மஃரிப் நேரம் ஒருமுறையும் என தினமும் நான்கு தடவை வெடி வெடிப்பது வழமையாக இருந்து வந்தன.

இரு பெருநாள் பிறை தென்பட்டாலும் பீரங்கி குண்டுகள் மக்காவில் முழங்குச் செய்வது மரபு.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த பீரங்கியின் சத்தத்தை தாங்கள் சிறுவர்களாக இருந்த போது  கேட்டதாக மக்காவின் உள்ளூர்வாசிகளான  சில முதியவர்கள் சொன்னார்கள்.

ரமழான் மாதத்தில் மட்டுமே பேசும் இந்த பீரங்கி மீதி 11 மாதங்கள் ஊமையாக இருக்கும். அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நவீனயுக மக்களுக்கு இதன் தேவை இல்லாததால் நிரந்தர ஊமையாகிவிட்டது என்கிறார் நிருபர் இப்ராஹிம்.

ஆனாலும் அதே ஜபல் மதாஃப் முகட்டில் நவீன சிறிய ரக பீரங்கி கொண்டு ஈத் பிறை தென்படும் இரவில் மட்டும் சில வருடங்களாக வெடிக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *