உலகின் 900 கோயில்கள் உள்ள அதிசய மலை!

குஜராத் மாநிலத்தின் – ஷத்ருஞ்ஜய் மலை மேல் 900 கோயில்கள் உள்ள அதிசயத்தை காணலாம். இதனை காண்பதற்காகவே அங்கு வெளிநாட்டவர்கள் படையெடுத்த வண்ணம் இருப்பார்கள். இங்குதான் ஜைன மத தீர்த்தக்காரர்கள் சமாதி நிலை எய்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த கோயிலில் மிக முக்கிய கடவுள் ஆதிநாத், ஆதிநாத்தின் சிலை 7 அடி உயரத்தில் நான்கு தலைகளுடன் காட்சியளிக்கிறது.

மாபிளினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில்கள் மிகவும் அழகானவை. இந்த மலைக்கோயிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது 220 அடி உயரத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடவுளர்கள் அனைவரும் உறைய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் சில வரலாற்று புராண தகவல்கள் கூறுகின்றன.

இரவில் அனைத்துக் கடவுள்களும் இங்கு உறங்குவதாக ஐதீகம் உள்ளது. இதனால் கோயில் குருக்கள் இங்கு இரவு முழுதும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மோட்சம் வேண்டுவோரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பவும் இந்த கோயிலை ஒருமுறையாவது பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்று ஜைன புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஆதிநாத், குமர்பால், விமல்ஷா, சம்ப்ரதிராஜா, சௌமுக் ஆகியவை இங்குள்ள ஜைன மதக் கோயில்களில் சிலவாகும்.

மொத்தம் 900 கோயில்களும் 18 கிமீ சுற்றுப்பரப்பிலேயே அமைந்துள்ளது. இதன் சிறப்பம்சம். பலர் நடந்தே செல்வது என்பதை பிரார்த்தனையாக வைத்துக் கொள்ள மற்றவர்கள் ரதம் மூலம் சுற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு கோயிலுக்கும் பின்னாலும் வேறு வேறு ஸ்தல புராணங்கள் உள்ளன. இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு செல்ல ரயில், சாலை மற்றும் வான் வழி போக்குவரத்துகள் உள்ளன.

பலிதானா என்பது ஒரு சிறிய ரயில் நிலையம் இங்கிருந்து தான் இந்த மலைக்கோயிலுக்கு எளிதாக செல்ல முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டு பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *