மூன்று ஆண்குறியுடன் பிறந்த அபூர்வ குழந்தை:.!

ஈராக்கில் மூன்று ஆண்குறிகளுடன் பிறந்த குழந்தையை மருத்துவ உலகினர் மிரட்சியுடன் பார்த்து வருகின்றனர்.

இதைக் கேள்விப்படும் போது ஒருவருக்கு ஒன்று தானே? மூன்று ஆண்குறிகளா என்று பிரமிப்படைவீர்கள்.. அது தான் யதார்தமும் கூட. நம்மில் பலரும் இதுவரை இப்படி ஒன்றை கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. இந்த உலகில் எதுவும் சாத்தியம் என்ற அடிப்படையில் தான் இதனை அணுகவேண்டியுள்ளது.

மருத்துவ உலகினரையே மலைக்கச் செய்து சரித்திரட்தில் இடம்பெற்றுவிட்டார் ஈராக்கைச் சேர்ந்த அந்த 3 மாத ஆண் குழந்தை. அக்குழந்தைக்கு இயற்கைக்கு மாறாக 3 ஆண்குறிகள் உள்ளன.

எங்களுக்கு தெரிந்தவரையில் மூன்று ஆண்குறிகளுடன் அல்லது triphallia உடன் பிறந்த குழந்தை என பதிவான முதல் நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும் என்று மருத்துவர் ஷாகீர் சலீம் ஜபலி International Journal of Surgery Case Reports என்ற மருத்துவ பத்ரிகையில் எழுதியுள்ளார்.

ஈராக்கின் துகோக் பகுதியைச் சேர்ந்த குர்து இனத்தை சேர்ந்த அந்த ஆண் குழந்தைக்கு ஆண்குறியில் வலி இருப்பதாக அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது தான் மருத்துவர்கள் அக்குழந்தைக்கு மேலும் இரண்டு ஆண்குறிகள் இருப்பதை கண்டறிந்தனர். இதில் ஒன்று 2 செ.மீ மற்றும் மற்றொன்று ஒரு செமீ அளவுடையது.

50 முதல் 60 லட்சம் ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டுமே இது போன்ற பிறவியிலேயே கூடுதலான ஆண்குறிகளுடன் பிறக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ உலகினர் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவில் இது போன்ற குழந்தை பிறந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அக்குழந்தை குறித்து முறையான மருத்துவ பதிவு ஏதும் இல்லை என சொல்லப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்படியான நிலையில் பிறந்த குழந்தைக்கு மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனையில் சிக்கலான 6 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் மூன்று ஆண்குறிகள் அறுவை சிகிச்சையின் மூலம் ஒன்றாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

முதல் முறையாக 1609ம் ஆண்டு triphallia உடன் ஒரு குழந்தை பிறந்ததாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை உலகில் இது போன்ற அபூர்வ அமைப்புடன் 100 குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பதாகவும் மருத்துவ உலகினர் தெரிவிக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, மருத்துவர்கள் இன்னும் இந்த குறைபாடுக்கான காரணத்தை சுட்டிக்காட்டவில்லை, ஆனால் அவர்கள் அதை இரண்டு ஸ்க்ரோட்டம்கள் அல்லது ஆசனவாய்களுடன் பிறப்பது போன்ற பிற பிறவி பிறழ்வுகளுடன் இணைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *