அதீத மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ!

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவுகடந்த மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும், கண் பார்வை குறைபாடு நீங்கும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

முருங்கைப்பூவை என்ணெயில் காய்ச்சி சிறு குழந்தைகளுக்கு தேய்த்து குளிக்கவைத்து வந்தால் சளி பிடிக்காது.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்

சர்க்கரை நோயா? தினமும் முருங்கை டீ பயன்படுத்தி பாருங்க….!

முருங்கை டீ:

முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஊட்டச்சத்துக்கள், ஆண்டி ஆக்சிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் உண்டாகின்ற ஏராளமான நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. குறிப்பாக, உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஜீரணக் கோளாறு ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *