நாளை முதல் யாழ்ப்பாண பாடசாலைகளுக்குப் பூட்டு

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குற்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதிலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.