வத்தளையில் இன்று நீர்வெட்டு!

சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக இன்று (23) காலை 9 மணி முதல் 6 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் பேலியகொட, வத்தள, ஜாஎல, கட்டுநாயக்க/சீதுவ ஆகிய நகர சபை பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன் களனி, வத்தள, பியகம, மஹர, ஜாஎல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *