Ice (ஐஸ்) எனும் போதை பொருளிடம் இருந்து விலகி விழிப்புடன் இருங்கள்!

இளைஞர்களின் தற்போதைய Trend இல் இருப்பது, ஐஸ் எனும் போதைப்பொருள் (#Methamphetamine) எனப்படும். இந்த ஐஸ் முதன் முதலில் இரண்டாம் உலக போரில் யுத்த வீரர்களை களைப்பின்றி போராட, ஒரு ஆயுதமாக ஜப்பானால் பயன்படுத்தப்பட்டது. ஹெரோயின், கஞ்சா போன்றல்லாது, 100% இரசாயனமானது  மற்ற வகை போதைப்பொருள்களை விட அதிக நச்சுத்தன்மை உடையதோடு நீண்ட நாட்களுக்கு உடலில் தங்கக்கூடியது இந்த ஐஸ்.

தற்போது இலங்கையிலும் அதிகளவு  இளைஞர் முதல் குடும்ப தலைவர்கள் வரை பரவலாக இந்த ஐஸ் எனும் போதை பொருளுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தாமே அழித்து கொள்வது மட்டும் இன்றி தம்முடைய குடும்பத்தாரின் உயிரையும் இழக்க செய்கின்றனர்.

இந்த ஐஸினால் எற்படும் விளைவுகள் இதோ பாவித்து சில மணி நேரத்தின் பின் இதற்கு எதிர்மாறாக தூக்கம், பசி, சோர்வு அதிகமாக ஏற்படும். அசாதாரண பதற்றம், கோபம், அதிக வியர்வை, தூங்க முடியாமை, தலைவலி என்பன காணப்படுவதோடு, நீண்ட கால விளைவுகளாக தனிமையை விரும்பல், எல்லாவற்றையும் சந்தேகப்படல், இரவில் சரியாக சுவாசிக்க முடியாமை, பற்கள் அழுகிக்கொண்டு செல்லல் (#Meth_mouth), சடுதியான உடல் நிறைக்குறைவு, confusion, இருட்டில் இருக்க விரும்புதல், யாருடனும் பேச விருப்பமின்மை, வாழ்க்கை மீது பிடிப்பின்மை போன்றவை ஏற்படும். முக்கியமாக கணவர்கள் தங்கள் மனைவிகள் மேல் அதீத சந்தேகம் அதன் விளைவாக அடித்து துன்புறுத்தல்.

இதன் இறுதி ஆபத்தான நிலைதான் #ME and #MY_ICE எனும் நிலை. இந்நிலையில் அவருக்கு உறவுகள், குடும்பம் எதுவுமே தேவைப்படாது, எதை விற்று/இழந்தாவது ஐஸ் மட்டும் அவரோடிருந்தால் போதும் எனும் தனிமை நிலை. இந்த நிலையை #Meth_Psychosis என அழைப்பர். இந்நிலையில் அதிக சந்தேகம், விரக்தி ஏற்படும், நிறையப்பேர் தற்கொலை கூட செய்வதுண்டு. அங்கோட மனநல மருத்துவமனையில் இதற்கென விசேடமாக Ice Ward என்று ஒரு பகுதி கூட உண்டு.
எனவே, உங்கள் இளைஞர்கள் மீது வீட்டில் விழிப்பாயிருங்கள். இக்கொடூர சமூக விசத்திலிருந்து இளைஞர் சமுதாயத்தை வருமுன் பாதுகாப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்தி மீட்டெடுப்போம், விநியோகஸ்தர்களை உரிய அதிகாரிகளிடம் காட்டிக்கொடுப்போம், எச்சரிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *