கொரோனா வைரஸ் மேலும் உருமாறும்
பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் துவங்கி விட்டனர். முன்னதாக சீனாவின் வுஹான் நகருக்கு உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் சென்று வைரஸ் எவ்வாறு உலகுக்கு பரவியது என்று ஆராய்ந்தனர்.

வவ்வால் இறகிலிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களின் வீரியம் குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்துவந்த நிலையில், வவ்வால்களில் இருந்து மனிதர்களை தாக்கும் வைரஸ் எந்த அளவு வீரியத்துடன் உடலை பாதிக்கும் என்று இவர்கள் ஆராய்ந்தனர்.

பிஎல்ஓஎஸ் என்ற மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. கொரோனா வைரஸின் ஜீன்களில் பலவிதமான மாற்றங்களை இந்த 11 மாதங்களில் உலகம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டி614ஜி உருமாற்றம், வைரஸின் மேல் படிந்துள்ள புரதத்தின் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவை இந்த வைரஸை உருமாற்றி இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

பிற வைரஸ்கள் போலவே பலவித உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக் கழக விஞ்ஞானி சரிஜி பாண்ட் கூறியுள்ளார். “பொதுவாக பறவைகளிடமிருந்து மனிதர்களது உடலுக்குள் செல்லும் வைரஸ் மனித ஜீன்களுக்கு ஏற்றார்போல தன்னை உருமாற்றிக் கொள்ள சிறிது காலம் பிடிக்கும்.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாற்றம் பெற்ற வைரஸை தற்போது பைசர், பயான்டெக் தடுப்பு மருந்து அழித்து வருகிறது. ஆனால் இந்த உருமாற்றம் இதோடு நிற்காது என்றும் மென்மேலும் உருமாற்றம் பெற வாய்ப்புள்ளது” என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *