கொலை செய்யப்பட்ட யுவதியின் தலை எங்கே?

கிணற்றை இறைத்து தேடுதல்: முடிக்கூட சிக்கவில்லை

இரண்டு தோணிகளில் கடுமையான தேடுதல்

மனைவிக்கு காண்பிக்க தலையை எடுத்துச் சென்றாரா?

வீட்டுக்குள் சடலம் கொண்டுசெல்லப்படவில்லை

மனைவி,பிள்ளைகள் வெளியே வரவே இல்லை

மரியாதை செலுத்த பொலிஸார் வரவில்லை

ஹங்வெல்ல விடுதியொன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட குருவிட்டவைச் சேர்ந்த 30 வயதான திலினி யேஹன்சா என்ற யுவதியின் ‘தலை’ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், அந்தத் தலையைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த யுவதியை படுகொலைச் செய்த புத்தள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உபபொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி​ரேமசிறி, பதுளையிலுள்ள தனது வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுப்பகுதியில், தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

யுவதியின் முண்டம், பயணப்பொதியில் பொதியிடப்பட்டிருந்த நிலையில், கொழும்பு– ஐந்துலாம்பு சந்தி, டேம் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. எனினும், அந்த யுவதியின் தலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.

அந்தத் தலை, களனி கங்கையில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இரண்டு தோணிகளின் உதவியுடன், இரண்டு மூன்று நாள்களாக தொடர்ச்சியாக தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், எவ்விதமான தடயங்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில். அத்தலையை தன்னுடைய மனைவிக்கு காண்பிக்கும் நோக்கில், வீட்டுக்கு எடுத்துச் சென்று, வீட்டுக் கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வீட்டுக்கு கிணற்றின் தண்ணீர் முழுமையாக இறைக்கப்பட்டு, கிணற்றில் தேடப்பட்டது.

கிணற்றிலிருந்து உபபொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி​ரேமசிறியின் ஆடை மட்டுமே மீட்கப்பட்டது. தலையோ அல்லது பெண்ணின் கேசமோ மீட்கப்படவில்லை.

இதற்கிடையில் மரணமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி​ரேமசிறியின் பூதவுடல், அவருடைய வீட்டுக்குள் கொண்டு செல்லப்படவில்லை, குறிப்பிட்ட உறவினர்கள் மட்டுமே பங்குபற்றி சடலத்தை புதைத்துள்ளனர்.

மனைவி, பிள்ளைகள் எவருமே வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, வீட்டுக்கு வெளியே சுமார் அரைமணிநேரம் மட்டுமே சடலம் வைக்கப்பட்டிருந்தது.

இறுதி மரியாதை செலுத்துவதற்கு பொலிஸார் எவருமே வருகை தரவில்லை. அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சிலர் வருகைதந்திருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

CN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *